2.0 படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ரஜினியின் 'பேட்ட' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் , எஸ்.பி பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் எஸ்.பி.பி பாடுவது இதுவே முதல் முறையாகும்.