துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மதிப்பெண் வேறுபாடுகளால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க முதலிடம் போன்ற வரிசை அறிவிக்கப்படாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பன்னீர் செல்வத்தின் இந்தப் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.