இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், `தலைமைப் பயிற்சியாளராக ரமேஷ் பவாரே தொடரவேண்டும்’ என்று கேப்டன் கவுர் மற்றும் மந்தனா, பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மிதாலி ராஜ், பவார் மீது குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த கடிதம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.