வேலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் தரையில் அமரவைக்கப்பட்டனர். இதைக் கண்டுகொள்ளாமல் மேடையில் இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுவிட்டுப் புறப்பட்டு சென்றார். ‘யாருக்கான விழா என்று கூடவா தெரியவில்லை’ என்று பெற்றோர் பொரிந்து தள்ளினர்.