2018 -ம் ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதை, குரோஷிய கால்பந்து அணியின் கேப்டனும் ரியல் மேட்ரிட் வீரருமான லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார். 2007 -ம் ஆண்டு முதல் மெஸ்ஸியும் ரொனால்டோவுமே மாறி மாறி, இந்த விருதை பெற்று வந்தனர். தற்போது அவர்களை பின்னுக்கு தள்ளி மோட்ரிச் இந்த விருதைப் பெற்றுள்ளார்.