தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் விழா ஒன்றில் பேசிய கமல் `விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் சங்கர் இயக்கத்தில் நான் நடிக்கவிருக்கும் இந்தியன் - 2 படமே எனது கடைசிப் படமாக இருக்கும்.’ என்றார் உருக்கமாக.