மேகதாது அணைக்கு அனுமதி அளித்தது குறித்து பா.ஜ.க-வை சாடி பேசிய ஸ்டாலின் தாமரை குறித்தும் பேசியிருந்தார். தொடர்ந்து அவருக்கு காட்டமாகப் பதிலளித்தார் தமிழிசை. இருவரும் தங்கள் கட்சி சின்னமான தாமரை, சூரியன் குறித்து வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் இரு கட்சி நிர்வாகிகளிடமும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.