பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா ரன் எடுக்க ஓடும் போது, அவரின் ஷூ கழண்டது. இதனால் அவர் ரன் அவுட் ஆனார். அதை சுட்டிக்காட்டி , ‘அவுட் கொடுக்கக்கூடாது’ என்று முறையிட்டும் அம்பயர் ஏற்கவில்லை. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.