ஆரணி நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டடம் திறப்பு விழா அரசு சார்பில் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் செய்யாறு எம்.எல்.ஏ கலந்துகொண்டனர். அ.தி.மு.க நிர்வாகி நித்தியானந்தம் எம்.எல்.ஏ-வுடன் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் நித்தியானந்தத்தின் சட்டையைப் பிடித்து மார்பில் ஒரு குத்துவிட்டார் எம்.எல்.ஏ.