Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது டாடா நெக்ஸான். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருந்தது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.