குளவியின் விஷத்தில் ஆன்டி-மைக்ரோபியல் பெப்டைட்ஸ் ( Antimicrobial peptides) என்ற நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட உயிரணு இருப்பதாக நியூயார்க்கின் எம்.ஐ.டி பல்கலைக்கழக இன்ஜினீயர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, நுரையீரலில் ஏற்படக்கூடிய தொற்று மற்றும் கிருமிகளை முழுமையாக அழிக்கவல்லது என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்.