ஹூண்டாய் சான்ட்ரோவுக்குப் போட்டியாக இருக்கும் தனது டியாகோ காரில், புதிதாக XZ+ எனும் டாப் வேரியன்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதில் எதிர்பார்த்தபடியே கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டியாகோ XZ+ 5.57-6.31 லட்சத்துக்கு கிடைக்கும். Gloss Black Wrap-க்கு, கூடுதலாக 7,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.