ஓலா, கடந்த 2016-ம் ஆண்டு, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் குறுகிய தூரங்களுக்கான Vogo ஷேர் ஸ்கூட்டர் சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த சேவை மூலம், வாடகைக்கு ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும். தற்போது இந்த ஷேரிங் ஸ்கூட்டர் சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காக 100 மில்லியன் டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.