வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.