மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் ரூ.220 கோடி செலவில் வெட்டுவென்னி - பம்மம், இரண்டரை கிமீ நீளத்துக்கு இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இந்தப் பாலப் பணிகள் நிறைவடைந்து, இன்று போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.