எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.10,391 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.