இந்தோனேசியாவின் சண்டா ஸ்டெரெய்ட் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று நேற்று திடீரென வெடித்தது. எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளிவந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சுனாமியும் ஏற்பட்டது. சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை காலை 43 ஆக இருந்த நிலையில் தற்போது 168 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது.