கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று மாலை 4 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மழையைப் பொருட்படுத்தாது   ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.