ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்துக்காக, பொதுமக்கள் வழிப்பாட்டுக்காக முக்கிய வீதிகளில் கொண்டுவரப்பட்டது. இதற்காகதான் இத்தனை வருடங்கள் காத்திருந்தோம். இனி எங்களது கிராமத்தில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாது என்று நடராஜரை வணங்கினர் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராம மக்கள்.