செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை விமர்சித்திருக்கிறார் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான வில்லியம் ஆண்டர்ஸ். 85 வயதான இவர் 1968-ம் ஆண்டில் நிலவைச் சுற்றி வந்த விண்கலத்தில் இடம் பெற்றிருந்த மூன்று பேரில் ஒருவர். அவர் மனிதர்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது முட்டாள்தனம் என தெரிவித்திருக்கிறார்.