ஜைன மதத்தின் சுவேதாம்பர தேராபந்த் பிரிவின் 11-வது தலைமை குருவான ஆசார்ய ஸ்ரீமஹாஸ்ரமன் அகிம்சையை வலியுறுத்தி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நெடும்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர் விழுப்புரம் வந்தடைந்தார். ஜைன மக்கள் மத்தியில் உரையாற்றி அருளாசி வழங்கினார்.