ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள, இனி ரத்த மாதிரிகள் தேவையில்லையாம். நாவில் ஊறும் எச்சிலைக் கொண்டே ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிந்துவிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சவுதி அரேபியாவைச் சேர்ந்த கிங் அப்துல்லா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வுக்கு வரவேற்பு பெருகிவருகிறது.