பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் உயர்ரக ஐபோன்கள் விரைவில் சென்னையிலேயே தயாராகவுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்‌ நோக்கியா ஆலை இருந்த இடத்தில்‌ ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனம் இந்தத் தயாரிப்பை நடத்தவுள்ளது. ஐபோன் தயாரிப்புக்காக அந்நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயை இங்கு முதலீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.