தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டனோ என்ற தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடல் பகுதியில் சுனாமி அலைகள்  உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.