வேடுவர்கள் வாழ்ந்த குறிஞ்சி நிலத்தின் இறைவனான முருகன், வேடுவனின் கோலத்திலேயே காட்சி தந்து அருள்பாலிக்கும் திருத்தலம், கொல்லிமலையில் இருக்கும் பழநியாண்டவர் திருக்கோயில்.  இந்தக் கோயிலைப் புனரமைக்கும் பணி கடந்த ஓர் ஆண்டாக நடந்து வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.