இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான மிருணாள் சென் வயது மூப்பினால் இன்று கொல்கத்தாவில் காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் ஏறக்குறையத் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.