இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான மிருணாள் சென் வயது மூப்பு காரணமாக இன்று காலை கொல்கத்தாவில் மரணமடைந்தார். மிருணாள் சென் இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. 1980களிலேயே பெண்கள் மீது இந்தச் சமூகம் என்ன பார்வை கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியவர். மாற்று சினிமாவுக்கான விதையை விதைத்தவர்.