கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 37 என்ற பெயரிடப்படாத படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் புத்தாண்டு இரவில் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 37வது படத்திற்கு காப்பான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா விஐபிகளைப் பாதுகாக்கும் கமாண்டோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.