ராயல் என்ஃபீல்டு, புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரப் போவதாகச் செய்திகள் வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது ராயல் என்ஃபீல்டு கொண்டுவர இருப்பது ஸ்கிராம்ப்ளர் இல்லை 2009-ல் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்த புல்லட் ட்ரையல்ஸ் மாடல் எனத் தெரிகிறது.