2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 மைக்ரோசாப்ட் வெளியிட்டதிலேயே மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இயங்குதளம் ஆகும். இந்த நிலையில், முதல் முறையாக முதலிடத்தை விண்டோஸ் 10-க்கு விட்டுக் கொடுத்திருக்கிறது விண்டோஸ் 7. விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி 39.22 % பேர் பயன்படுத்துகிறார்கள்.