நிலாவின் மறுபக்கத்தில் `Chang’e 4’ விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி வரலாறு படைத்துள்ளது சீனா. அதில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை நிலவின் மேற்பரப்பு மற்றும் உட்பகுதியை ஆய்வுசெய்து படங்களை அனுப்பும் என்றும் அறிவித்துள்ளனர்.  இது வரலாற்றுச் சாதனை’ என சர்வதேச அரங்கில் சீனாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.