தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள இளம் கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், நாசரேத் சேலஞ்சர்ஸ் அகாடமி சார்பில் கால்பந்து தொடர் நடத்தப்பட்டது. வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து 12 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொண்டன. இதில் நாசரேத் மர்காஷியஸ் சீனியர் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.