ஈரோடு, வஉ.சி பூங்காவில் உள்ள ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவில், வழிபாட்டுக்குழுவினர் அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அனுமன் ஜெயந்தி விழா வருவதை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக ஈரோட்டில் 75.000 லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.  60 பேர் இந்த லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.