புத்தாண்டின் முதல் வாரத்தில் சிட்னியில் நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘பிங்க் டெஸ்ட்’என்று அழைக்கப்படுகிறது. இதில் திரட்டப்படும் நிதி ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மெக்ராத்தின் கேன்சர் மையத்துக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோலி பிங்க் நிற ஹேண்ட் க்ளவுஸ், பேட் க்ரிப் ஆகியவற்றுடன் களமிறங்கினார்.