வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலை நிறுவிய சக்தி அம்மா சாமியாரின், 43-வது பிறந்தநாள் விழாவில் மூன்று மாநில ஆளுநர்கள் பங்கேற்றதால், போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன.