ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 193 ரன்னில் ஆட்டமிழந்த அவர், ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடரில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். முன்னதாக 2003/04 -ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் டிராவிட் 1,203 பந்துகள் சந்தித்திருந்தார்.