டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி 596 ரன்களுக்கு மேல் எடுத்து அந்த அணி தோல்வி அடைந்தது கிடையாது. ஆஸி. அணி சிறப்பாக விளையாடினாலும், இந்தப் போட்டி டிராவை நோக்கிச் செல்லவே வாய்ப்பு உள்ளது. இதனால், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல இது நல்ல வாய்ப்பு எனக் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.