டீன்ஏஜ் பெண்கள் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதால், தங்கள் வயதில் உள்ள ஆண்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக மனஅழுத்தத்துக்கு உள்ளாவதாக இங்கிலாந்திலுள்ள லண்டன் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 சதவிகித டீன்ஏஜ் பெண்களும், 28 சதவிகித டீன்ஏஜ் ஆண்களும்  தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.