தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களிடத்திலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து திட்டப் பணிகளில் அதிகளவில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.