தனது நேர்மையான செயல்பாட்டின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல்.  ஜடேஜா பந்துவீச்சில் ஹாரிஸ் அடித்தப் பந்தை தாவிப் பிடித்த கே.எல் ராகுல் உடனடியாக, அது கேட்ச் இல்லை, தரையில் பட்டுவிட்டது என நேர்மையாகத் தெரிவித்தார், அவரது செயல்பாட்டை நடுவரும் பாராட்டினார்.