நயன்தாரா கதாநாயகியாக  நடிக்கும் `ஐரா' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  நயன்தாரா இப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மெட்ராஸ் கலையரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  படத்தின் திகிலூட்டும் காட்சி அமைப்புகள், இசை சிறப்பாக அமைந்துள்ளது. டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.