மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம். ஆண்டாளின் ஜன்ம பூமியான ஸ்ரீவில்லிபுத்தூரி நாச்சியார் திருக்கோயிலில்  இந்த மார்கழி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரி ஆண்டாள் நீராட்டு உற்சவம் வரும் 8 -ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.