கரூரில் கடவூர் அருகே 66 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது, நம்மாழ்வார் விதைக்கப்பட்டிருக்கும் வானகம். நம்மாழ்வார் நினைவுநாள் விழாவில் அவரது சமாதியில், `நாங்களும் நம்மாழ்வார் சொன்ன கருத்துகளைப் பின்பற்றி, எங்க நாட்டில் இயற்கை விவசாயம் பண்ணப் போகிறோம்’ என்று சூளுரைத்திருக்கிறது இத்தாலியைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று.