சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்றது ஆஸ்திரேலியா.