பாகிஸ்தானுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது. பாகிஸ்தான் நிர்ணயித்த 41 ரன்கள் இலக்கை 9.5 ஓவர்களில் எட்டிய தென்னாப்பிரிக்கா, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 7வது டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.