இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 -வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைபற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை கோலி தலைமையிலான இந்திய அணி பெறுகிறது.