குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மொடேரா பகுதியில் கட்டப்பட்டு வருகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம். 63 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து காணப்படும் இந்த மைதானத்தில் மூன்று பயிற்சி மைதானங்கள், நீச்சல் குளம், க்ளப் ஹவுஸ் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளன. இதில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.