‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். இது குறித்து பேசிய விஷால், ``ராயல்டி குறித்து இளையராஜா ஒரு முக்கிய அறிவிப்பை விரைவில் அறிவிப்பார். ராயல்டியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் தயாரிப்பாளர் சங்க ட்ரஸ்ட்டுக்கும், மியூசிக் யூனியனுக்கும் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்” என்றார்.