மிக மிக உயரமான மலை உச்சியில் ராணுவ பீரங்கியை (Operational Tank) நிறுத்தி பாகிஸ்தான் ராணுவம் உலக சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப்பகுதிக்கு நேராக இந்தப் பீரங்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவினால் தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்குமாம்.