சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களுக்கு எக்ஸோ ப்ளானட் என்று பெயர். இந்த எக்ஸோ ப்ளானட்களின் இருப்பிடம் பற்றிய ஆராய்ச்சிக்காக 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் டெஸ் (TESS) செயற்கைக் கோளை நாசா விண்ணில் செலுத்தியது. இரவு வானத்தைக் கழுகு போல் கண்காணித்து  தற்போது மூன்றாவது கோளைக் கண்டறிந்துள்ளது டெஸ்.